img img img img img img img img img img img img img img img img

செய்திகள் >> இந்தியச் செய்திகள்

  • சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. முன்னதாக, பெங்களூரில் உள்ள இசுரோ  கட்டுப்பாட்டு தலைமையகத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கும், அதிலிருந்து பிரக்யான் ரோவர் இயக்குவதற்கும் முன்னதாக கவுண்டன் நிகழ்வு நடைபெற்றது. சரியாக 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் மென்மையான முறையில் (Soft Landing) தரையிறக்கப்பட்டது. 6 சக்கரங்கள் கொண்ட சிறிய கருவியான ரோவர், இந்தியாவில் மூவர்ணக்கொடியும் இசுரோவின் சின்னத்தையும் நிலவில் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    அடுத்த 14 நாட்களுக்கு சூரியஒளிசக்தியின் மூலம் ரோவர் கருவி இயங்கும் என்றும், ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் என்றும் இசுரோ தலைமை கட்டுப்பாடு  மையத்தின் மூலம் இதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரசியா,  சீனாவுக்குப் பிறகு நிலவில் கால்பதித்த  நான்காவது நாடாக இந்தியா இருக்கிறது. அதேசமயம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் உலகின் ஒரே நாடாக இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
பாடல் : மண் மீட்க சென்றவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்கள்..... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : சித்தன் தெ.ஜெயமூர்த்தி, சினேகா குமரன்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்