இசைக் கலைஞன் கபிலன் லோகேந்திரன் அவர்கள் கடந்த 2019 ஆண்டு தளிர் நடாத்திய மாபெரும் நிகழ்வான சலங்கையும் சங்கீதமும் இசை நடனப்போட்டியில் கலந்து கொண்டு தனது பாடல் திறனால் பல சுற்றுக்களில் தெரிவாகிய இளம் பாடகன் என்பதும் இங்கு குறிப்பிடதக்கதாகும். இவரது தாயும் தந்தையும், மகனின் இசை வளர்ச்சியில் அயராது பாடுபட்டு வருவதுடன் பொது விடயங்களிலும் அர்பண உணர்வுடன் செயல்பட்டும் வருகின்றனர்.
தளிரின் நட்புடனும் தளிர் முன் எடுக்கும் சகல நிகழ்வுகளிலும் பங்கு கொள்வதுடன் தளிரின் மனிதாபிமான அமைப்பான சுதந்திர மனித அபிவிருத்தி கழகத்தின் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.