சுமார் 7 வருடங்களாக கனடிய பரப்பில் தளிர் காலாண்டு இதழாக தமிழ் மணம் பரப்பி வரும் தளிர் இதழானது பல் வேறு விடயங்களையும் தன்னகத்தே கொண்டு ஊடக பரப்பில் தடம் பதித்து வருவதுடன் கலைகளுடனும் இலக்கிய பண்பாடுகளுடனும் சமூக சேவைகளிலும் தனது ஆணித்தனமான பணிகளையும் தொடராக தாயக உறவுகளுக்கு தன்னால் ஆன முடிந்த உதவிகளையும் செயல் படுத்தியும் வருகின்றது. இந்த வருடம் கொரோனா வின் அசாதாரண சூழலிலும் மனித நேய செயற்பாட்டில் அன்பு உள்ளங்களின் உதவியுடன் சுமார் 15 ஆயிரம் டொலர்களுக்கும் மேற்பட்ட தாயக உறவுகளுக்கு வடகிழக்கு மலையகம் உட்பட மனித நேய செயற்பாட்டினையும் தளிர் உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படுத்தி வருகின்றனர். இந்த வருடத்தின் அசாதாரண சூழலுக்கு முகம் கொடுத்து வந்த தளிர் உறுப்பினர்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தவும் அன்பினால் ஒன்று படவும் தளிர் குழுமத்தின் நிர்வாக உறுப்பினரான வி.கே.கல்யாணசுந்தரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நேற்றைய தினம் 16 - 08 - 2020 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10மணி முதல் மாலை 6.மணிவரை தளிர் குழுமத்தினரின் கோடை கால சங்கமம் மிக சிறப்பாக இடம் பெற்றது. இன் நிகழ்வில் இம்மாதம் தமது பிறந்த நாளை கொண்டாடிய தளிர் குழுமத்தினைச் சேர்ந்த பிரதம இணைப்பாளர் தர்சினி, தளிர் நிர்வாக செயலாளர் தீபா, மற்றும் தளிர் இளையோர் குழுவின் தலைமை பொறுப்பினை வகித்து வரும் ஆரணி ஆகியோருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மற்றும் இன் நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக நட்பு வட்டங்களாக கலந்து கொண்ட தொழில் துறையின் முன்னோடிகளான கேதா நடா, சங்கர் நல்லதம்பி, கனகாம்பிகை நகை மாளிகை கோபால் நடா, மனிதாபிமான செயற்பாட்டாளர் லோகன் ராசையா, மற்றும் தாசு திருமதி கவிதா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இன் நிகழ்வினை மேலும் சிறப்படைய செய்வதற்காக பல உணவு வகைகளை தயாரித்து தளிர் குழுமத்துடன் ஒருங்கிணைந்து முன்னின்று வழி நடத்திய தளிர் நிர்வாக உறுப்பினர்களான தளிர் குழுமத்தின் தலைவர் செ.கிருசுணகோபால் திருமதி ரஞ்சினி, மற்றும் தளிர் நிர்வாக உறுப்பினர்களும் தளிரின் வளர்ச்சிப்பாதையில் என்றும் முன்னோடிகளாக செயற்படும் யெயம் கணகசபை திருமதி யசோதா மற்றும் அருண்குலசிங்கம், அருமை நட்பின் கதிரவேல் கருணாநந்தன், திருமதி அகல்யா, மாலினி பரராஜசிங்கம் (நடன ஆசிரியை), மலர் திருநாவுக்கரசு, பிரியதர்சினி, சினேகா குமரன், ஆரணி திருநாவுக்கரசு, தளிர் உதவி ஆசிரியை சிவமோகன் நந்தினி , வசந், திருமதி வசந்த மற்றும் அனைத்தையும் திறம்பட நடாத்தி தலைமை வகித்த கல்யாணசுந்தரன் மற்றும் அவரின் துணைவியார் ஜெயா அவர்களின் மகள் , மருமகன் ஆகியோரின் ஒற்றுமையுடனும் இந் நிகழ்வு மிகவும் நல்லதொரு பொழுதாக இனிதான பசுமை நினைவுகளுடன் நிறைவு பெற்றது. படங்களுடன் செய்திகளுக்காக : வாழையூரான்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news