பரபரப்பாக நடைபெற்ற உலக கோப்பை அரை இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரை இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது . ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் என களமிறங்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை கதிகலங்க வைத்தனர். தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் கில் கூட்டணி சிறப்பான ஓப்பனிங் தந்தது. வாண வேடிக்கை காட்டிய ரோகித் சர்மா 4 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என 47 ரன்களில் அவுட் ஆக, கில் 80 ரன்கள் குவித்தார். 3ஆவதாக களமிறங்கிய விராட் கோலி, நிலையாக நின்று ஆடி சதம் அடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் முதன்முறையாக 50ஆவது சதம் அடித்து சாதனை படைத்த அவர், 117 ரன்களுக்கு அவுட் ஆனார். மறுபுறம் அபாரமாகவும் அதிரடியாகவும் விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர், 70 பந்துகளில் 105 ரன்கள் குவித்தார். கேஎல் ராகுலும் தன் பங்குக்கு 39 ரன்கள் சேர்த்தார். அதனால் இந்தியா 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே விட்டுக்கொடுத்து 397 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங்கைத் தொடங்கினர். ஆனால் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி, நியூசிலாந்து அணியின் அந்த கனவைத் தகர்த்தார். அவரது துல்லியமான பந்துவீச்சுத் தாக்குதலால் நிலைகுலைந்த நியூசிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான இடைவெளிகளில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். மறு முனையில் அசத்தலாக விளையாடிய டேரில் மிச்செல் அபாரமாக விளையாடி 134 ரன்களுக்கு அவுட் ஆனார். ஷமி 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். கடைசியில் நியூசிலாந்து அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 70 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அத்துடன் 10ஆவது தொடர் வெற்றியையும் பதிவு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையே இன்று நடைபெறும் போட்டியில் வெல்லும் அணியுடன் இறுதிப் போட்டியில் இந்தியா மோதவுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news