இலங்கை வெளிவிவகார அமைச்சு, ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (யுனெசுக்கோ) நிறைவேற்று சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பாரிசில் நேற்றைய தினம் (15) இடம் பெற்ற யுனெசுக்கோ அமைப்பின் 2023 தொடக்கம் 2027 வரையான காலகட்டத்திற்கான 42 வது பொது மாநாட்டின் போதே இந்த நிறைவேற்று சபைக்கான உறுப்பு நாடுகள் தெரிவிற்குரிய வாக்கெடுப்பு இடம்பெற்றது . இதன்போது 58 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்புக்கான தேர்தலில், 188 உறுப்பு நாடுகள் வாக்களிப்பதற்காக பங்குபற்றியிருந்தது இதில் 144 வாக்குகளைப் பெற்று இலங்கை நிறைவேற்று சபையில் அங்கத்துவத்தை பெற்றுள்ளது. மேலும், ஆசிய - பசுபிக் பிராந்தியத்தின், ஒன்பது வேட்பாளர்களில் ஆறு பேர் யுனெசுக்கோ உறுப்பு நாடுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இலங்கையுடன், பாகிசுத்தான், இந்தோனேசியா, பங்களாதேசு, கொரியா மற்றும் அவுசுத்திரேலியா ஆகிய நாடுகளும் இந்த பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளாக உறுப்புரிமை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news