முன்னாள் அதிபரும் பொதுசன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராசபக்ச, பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்ற தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார். தலதா மாளிகை வழிபட்டின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராசபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராசபக்ச, பசில் ராசபக்ச உள்ளிட்டோரே காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பில் மகிந்த ராசபக்ச தெரிவிக்கையில், உயர்நீதிமன்ற உத்தரவை யாராலும் மீற முடியாது அதனை எதிர்க்கவும் முடியாது. அதனை நாம் மதிக்க வேண்டும். எனினும், உயர் நீதிமன்ற தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்ள போவதில்லை. எனது தரப்பிலான கருத்துக்களை நீதிமன்றில் முன்வைக்க வாய்ப்பு கிடைக்குமென நினைக்கிறேன்.என்றார். அதேவேளை, இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிப்பதாகவும் நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது அதனை தோல்வியடைய செய்வதற்கான தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலையும் எதிர்நோக்க நாம் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news