சென்னை அப்போலோ மருத்துவமனையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இடதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா, சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிசன் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமான செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உருவான போது இருந்த 36 தலைவர்களில் ஒருவர் சங்கரய்யா. 1977, 1980 தேர்தல்களில் மதுரை கிழக்கு தொகுதியில் வென்று எம்.எல்.ஏ. ஆனவர் சங்கரய்யா. 1967-இல் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சென்னை மாணவர் சங்கத்தில் இணைந்து சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர் சங்கரய்யா. காமராஜர், சஞ்ஜீவரெட்டி போன்றோருடன் சிறைவாசம் அனுபவித்தார் சங்கரய்யா. சென்னை மாணவர் சங்கத்தில் இணைந்து சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர் சங்கரய்யா என்பது குறிப்பிடத்தக்கது. இவரது உடல் குரோம்பேட்டை இல்லத்தில் சில மணி நேரம், குடும்பத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின், சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் உடல் வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு சங்கரய்யாவின் இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news