யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் பகுதியில் 750ற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள், நேற்றைய தினம்(14) நெடுந்தீவு கிழக்கு 15 வட்டாரம் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத தனியார் காணியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி ரவைகள் தொடர்பில் காவல்துறை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நெடுந்தீவு காவல்துறையினர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் அனுமதியை பெற்ற பின்னர் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மண் அகழும் இயந்திரத்தின் உதவியுடன் காவல்துறையினரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து நடாத்திய தேடுதலில் ரி 56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 750ற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலையில் முடிவுறுத்தப்பட்டதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news