ஓபராய் குழுமத்தின் தலைவரான பிருத்வி ராஜ் சிங் ஓபராய் (வயது 94 ) காலமானார். இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான பிருத்விராஜ் ராஜ் சிங் ஓபராய், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறப்பாக பணியாற்றியதற்காக பதம் விபூசன் விருது பெற்றார். மேலும் சர்வதேச சொகுசு பயண சந்தையில் வாழ் நாள் சாதனையாளர் விருதையும் பெற்றார். இந்நிலையில் தனது 94 வயதில் அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து ஓபராய் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ஓபராய் குழுமத்தின் தலைவர் பிருத்விராஜ் ராஜ் சிங் ஓபராய் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. பிஆர்எஸ் ஓபராயின் மறைவு தங்களை மிகுந்த மனவேதையில் ஆழ்த்தியிருக்கும் இந்த வேலையில் அவர் விட்டுச்சென்ற மரபை கொண்டாடுவதை தாங்கள் நோக்கமாக கொண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிருத்வி ராஜ் சிங் ஓபராயின் இறப்பு இந்தியா மட்டுமல்லாது உலகில் உள்ள விருந்தோம்பல் துறைக்கே ஒரு பேரிழப்பாக அமையும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிருத்வி ராஜ் சிங் ஓபராயின் உடல் கபசேராவில் உள்ள ஓபராய் பண்ணையில் இன்று மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news