தமிழ்நாட்டில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலமாக வானிலை ஆய்வு மையம் வரையறுத்துள்ளது. இந்த காலகட்டத்தில் தென்னிந்திய பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, தெற்கு கர்நாடகா, தெற்கு ஆந்திரா, ராயலசீமா பகுதிகள் அதிக மழையை பெறும். வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகி உள்ள முதல் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இது உள்ளது. இந்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இதனால் இன்று தமிழ்நாட்டில் மிக கனமழையும் அடுத்த 5 தினங்களுக்கு கனமழையும் பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை கடந்த அக்டோபர் மாதம் வரை தமிழகம், புதுவை, காரைக்கல் பகுதிகளில் இயல்பை விட 43% குறைவாக பதிவாகி உள்ளது. பதிவான மழையின் அளவு 98 மி.மீ ஆனால் இந்த காலகட்டத்தின் இயல்பான அளவு 171 மி.மீ ஆகும். கடந்த 123 ஆண்டுகளில் 9ஆவது முறையாக குறைவான அளவு மழை பதிவாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாகவும், 6 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், 17 மாவட்டங்ங்களில் இயல்பை விட மிக குறைவான அளவு மழையும் பதிவாகி உள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news