இசுரேலுக்குள் கடந்த மாதம் 7ஆம் தேதி புகுந்து தாக்குதல் நடத்திய கமாசு அமைப்பினர் இசுரேலியர்களை பினைக் கைதிகளாக சிறைபிடித்துச்சென்றனர். அதனை தொடர்ந்து கமாசு அமைப்பை அழித்தொழிப்போம் என்ற உறுதியுடன் இசுரேல் உக்கிரமாக போரிட்டு வருகிறது. காசாவில் சண்டை உக்கிரமாகியுள்ள நிலையில், 4 ஆயிரம் குழந்தைகள் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக பாலசுத்தீனம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடக்கு காசா பகுதியில் நாள்தோறும் 4 மணி நேரம் சண்டை நிறுத்தத்துக்கு இசுரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது. கூடுதல் நேரம் சண்டை நிறுத்தம் தேவை என்று தாம் வலியுறுத்தியதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். முழுமையான போர் நிறுத்தம் இருக்காது என்று கூறியுள்ள இசுரேலிய ராணுவம், மனிதாபிமான உதவிகளுக்காக மட்டும் சிறு சிறு பகுதிகளில் போர் நிறுத்தம் சில மணி நேரம் இருக்கும் என்று அறிவித்துள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாகவும், பினைக்கைதிகள் விடுவிப்பு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news