இந்தியாவில் டெல்லியில் காற்று மாசு பாதிப்பை போக்கும் வகையில் செயற்கை மழை பொழிய வைக்க ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுருந்த நிலையில், அதற்கு அவசியமன்றி, மிதமான மழை டெல்லியை குளிர்வித்தது. அண்டை மாநிலங்களில் விவசாய எச்சங்கள் எரிப்பு, கட்டடங்கள் இடிப்பு போன்ற காரணங்களால் குளிர்காலங்களில் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. நடப்பாண்டும் காற்று மாசால் தலைநகர் டெல்லி திணறி வருகிறது. காற்றின் தரம் மிகவும் ஆபத்தான நிலையை எட்டியிருப்பதாக டெல்லி காற்று மாசு வாரியம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த அளவை விட , 100 மடங்கு அதிக காற்று மாசுடன் காணப்பட்ட டெல்லி, உலகின் மிகவும் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றது. இதனிடையே, செயற்கை மழையை உருவாக்குவது தொடர்பாக, கான்பூர் ஐஐடி நிபுணர்களுடன் ஆம் ஆத்மி அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் கர்தவ்யா பாதை, டெல்லி-நொய்டா எல்லை உள்ளிட்ட சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது. ஒரே நாள் இரவில் பெய்த மிதமான மழையால் டெல்லி மற்றும் சுற்றுப்பகுதியில் மாசு மற்றும் புகைமூட்டம் குறைந்துள்ளது. அதனால் டெல்லி வாழ் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். மேலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்து இருப்பதால், தீபாவளிக்கு முன்னதாக காற்று மாசு மேலும் குறையும் என நம்பப்படுகிறது. டெல்லியில் நேற்று மாலை 438 ஆக இருந்த காற்றின் தரக்குறியீடு இன்று காலை 407 குறைந்தது. டெல்லியில் நேற்றிரவு பெய்த மழை, காற்றுமாசு தீவிரத்தை குறைக்க மட்டுமே உதவும்… பரவலாக கனமழை பெய்தால் மட்டுமே காற்று மாசு கட்டுப்படுத்த முடியுமென்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news