img img img img img img img img img img img img img img img img

ஸ்காபரோவில் முதன்முதலாக மருத்துவக் கல்லூரியை உருவாக்க அடித்தளமிட்டு வரலாறு படைத்துள்ளனர்!

  
 


ஸ்காபரோ ஒருங்கிணைந்த மருத்துவ சுகாதார கல்லூரியானது (SAMIH) சுகாதார பாதுகாப்பு வல்லுநர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் உடல்நல சிகிச்சை வல்லுநர்கள் ஆகியோரின் பயிற்சிக் களமாக இருக்கும். இம்மருத்துவக் கல்லூரியைப் பற்றி ஒன்றாரியோ மாநில சட்டமன்ற உறுப்பினரும் போக்குவரத்து அமைச்சின் இணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்கள் குறிப்பிடுகையில்,

"எங்கள் அரசாங்கத்தின் உறுதியான ஆதரவுடன், ஏறத்தாள 200 ஆண்டுகளுக்குப் பின்னர், எங்கள் குடியிருப்பாளர்கள் அனைவரின் நலனுக்காக, ஸ்காபரோவின் சிறந்த சுகாதார பாதுகாப்புக்கான புதிய சகாப்தத்தை தொடங்குகிறோம். இத்திட்டத்தின் மூலம் அடுத்தடுத்து வரும் பல தலைமுறைகளுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றுவதற்கான  மருத்துவ நிபுணர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

ரொரன்றோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தில் இம்மருத்துவ பீடத்திற்கான முதலாம் கட்ட கட்டுமானத் திட்டம் கடந்த திங்கட்கிழமை 06.11.2023 அன்று நிறைவேறியது. இப்பீடத்துக்கான கட்டுமானங்கள் 2026ஆம் ஆண்டில் நிறைவுபெறும். SAMIH செயற்படத் தொடங்கியவுடன், ஓராண்டிற்கு 30 மருத்துவர், 30 மருத்துவ உதவியாளர், 30 செவிலிய பயிற்சியாளர், 40 உடல்நல சிகிச்சை வல்லுநர்கள் மற்றும் 300 உயிரியல் வல்லுநர்கள் இளங்கலை பட்டதாரிகளாக பயிற்றுவிக்கப்படுவார்கள். இது ரொரன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தின்  விரிவாக்கப்பட்ட உயிரியல் திட்டத்தையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
பாடல் : மண் மீட்க சென்றவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்கள்..... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : சித்தன் தெ.ஜெயமூர்த்தி, சினேகா குமரன்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்