பிரேசிலைச் சேர்ந்தவர் லுவானா ஆண்ட்ரேட். இன்டாசுகிராமில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இவரை பின்தொடருகின்றனர். லுகண்ட் ஸ்டோர் நிறுவனரான இவர், உலகம் முழுவதும் சுற்றி வந்ததோடு, ஃபிட்னசு ஆர்வலராகவும் இருந்து வந்தார். 29 வயதான இவர், தனது முழங்காலில் உள்ள கொழுப்பை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுமார் இரண்டரை மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் அவர் சுய நினைவுக்கு திரும்பாத நிலையில் ஐசியூவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சையின்போது அவருக்கு, 4 முறை மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதில், சிகிச்சை பலனின்றி லுவானா ஆண்ட்ரேட் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. அறுவை சிகிச்சையின்போது ஏற்பட்ட ரத்த உறைவு காரணமாக உடல் பாதிக்கப்பட்டு லூவானா உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. உடலில் உள்ள கொழுப்புகளை எடுப்பது liposuction சிகிச்சை. லுவானா ஆண்ட்ரேட் இன்ஸ்டாகிராம் பிரபலமாக இருந்ததால், உடல் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என கருதி கொழுப்பை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதுவே அவரது உயிரையும் குடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news