img img img img img img img img img img img img img img img img

லியோவின் வெற்றியை கொண்டாட திட்டமிட்டுள்ள படக்குழுவினர்...

  
 


லோகேசு கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை ஈட்டியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த படக்குழுவினர், லியோவின் வெற்றியை கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

அதன் படி, வரும் புதன்கிழமை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ வெற்றி விழா கொண்டாட அனுமதி கோரி படக்குழுவினர் காவல்நிலையத்தில் மனு அளித்தனர். விழாவில் 6000 ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரசிகர்கள் பேருந்துகளில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 200 முதல் 300 கார்களில் மட்டுமே விழாவிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான டிக்கெட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் நிகழ்ச்சியை கண்டிப்பாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணங்களால் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், லியோ வெற்றி விழாவை பிரமாண்டமாக கொண்டாட படக்குழுவினர் ஆயத்தமாகி வருகின்றனர்.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
பாடல் : மண் மீட்க சென்றவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்கள்..... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : சித்தன் தெ.ஜெயமூர்த்தி, சினேகா குமரன்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்