முன்னணி நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது மற்ற மாநிலங்களில் நள்ளிரவு 12 மணி, அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் காலை 9 மணி முதல் லியோ திரைப்படத்தின் காட்சிகள் வெளியாக உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வழக்கமாக முதல் நாள் காட்சிகள் அனைத்தும் பெரும்பாலான ஆண் ரசிகர்கள் படம் பார்க்கும் நிலையில் தற்போது முதல் முறையாக செங்கல்பட்டு எஸ் ஆர் கே திரையரங்கத்தில் ஒரு காட்சி முழுவதும் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டு உள்ளது. காலை 9 மணிக்கு முதல் காட்சி துவங்கும் நிலையில் இரண்டாவது காட்சியான 12.30 காட்சியில் சுமார் 250 டிக்கெட்டுகளை மகளிர் அணி உறுப்பினர்கள் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி தலைவர் எம் எஸ் பாலாஜி தலைமையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து டிக்கெட்டுகளும் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news