கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்காசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது. இந்நிலையில் பிக்பாஸ் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் 2 வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை முன்னதாகவே ப்ரமோவில் கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் நுழைந்தார். அதன் பிறகு பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். இந்நிலையில் இந்த வார கேப்டனாக விஜய் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விஜய் வர்மாவை அதிகம் ஈர்க்காதவர்கள் என்று, ஐஷு, நிக்ஸன், எழுத்தாளர் பவா செல்லதுரை, அனன்யா, வினுஷா, ரவீனா ஆகிய ஆறு பேரும் இரண்டாவது வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்று பிக்பாஸ் தெரிவித்தார்.இரண்டாவது வீட்டிற்கு ஸ்மால் பாஸ் வீடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் கேப்டனால் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேர் இந்த வீட்டிற்கு செல்வார்கள் என்றும், அந்த ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய அனுமதி இல்லை என்றும், எந்த டாஸ்கிலும் பங்குபெற கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் முடிவு செய்யும் உணவை ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் சமைக்க வேண்டும் என்றும் மற்ற வீட்டு வேலைகளையும் அவர்களே செய்யவேண்டும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல்வார எவிக்ஷன் நாமினேஷனில் ஜோவிகா, ஐஷு, ரவீனா, அனன்யா, செல்லதுரை, யுகேந்திரன், பிரதீப் என ஏழு பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மட்டுமே சமைக்க வேண்டும் என்ற விதியை மீறி பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் விசித்திரா மற்றும் யுகேந்திரன் கிச்சனில் சென்று சமைத்ததால் அவர்கள் இருவரும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்துவிட்டார். இதனை தொடர்ந்து பிரதீப் அங்கு நாமினேட் ஆகாத இருவரை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்ப பிக்பாஸிடம் கோரிக்கை வைக்க அது விசித்திரா மற்றும் பிரதீப் இடையே வாக்குவாதத்தை ஏற்படித்தியுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news