திரைப்படம் வெளியாகி 7 நாட்களில், விசால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான மார்க்க ஆண்டனி, சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் தொழில்நுட்பக் கலைஞர்களும் செய்தியாளர்களை சென்னையில் சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் வினோத், படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி, ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம், டிசைனர் சிவகுமார் உள்ளிட்ட பலரும் படத்தின் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். இவர்களை தொடர்ந்து பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த தனக்கு நடிகர் விசால் வாய்ப்பு வழங்கினார் என நெகிழ்ச்சியுடன் கூறினார். அத்துடன் மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாவதற்கு நடிகர் அசித் தான் காரணம் இந்த படத்தின் வெற்றியை நடிகர் அசித்திற்கு சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார். மார்க் ஆண்டனி திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வின் நடிப்பு பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. அவர் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து பேசுகையில், ஆரம்பத்தில் வயதான கதாபாத்திரத்துடன் மட்டுமே கதை இருந்தது. ஆனால் சில மாற்றங்கள் இருந்தால் நான் நடிக்கிறேன் என ஆதிக்கிடம் கூறினேன். அதற்கு ஏற்ற வகையில் ஆதிக்கு ரவிச்சந்திரன் சிறப்பான கதையை 20 நாட்களில் உருவாக்கினார் என எஸ்.ஜே.சூர்யா பேசினார். எஸ்.ஜே.சூர்யாவை தொடர்ந்து நடிகர் விசால் பல்வேறு விசயங்களை மேடையில் சுவாரசியமாக பேசினார். அதுவும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது என கூறினார். அதன் பின் படத்தில் இடம் பெற்ற சில்க் ஸ்மிதா கதாபாத்திரம் குறித்து சுவாரசியமாக பேசினார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news