வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் கனேடிய நாட்டில் தமிழ் வானொலி ஊடகத்துறையில் பயணிக்கும் இளங்கோ மாணிக் அவர்களது தாயாருமான திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் (வயது 86) இன்று காலமானார். தனது இரண்டாவது மகனான வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் கொழும்பு வீட்டில் வசித்து வந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் யாழ்.வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற அதிபர் என்பதுடன் அதே பாடசாலையில் ஆசிரியராக மற்றும் அதிபராக 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ளதுடன், காலம் சென்ற ஆசிரியர் மாணிக்கவாசகரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அன்னாரின் பூதவுடல் நாளையும், நாளை மறுதினமும் கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் எடுத்து செல்லப்பட்டு கேணியடி கொக்குவில் மேற்கில் உள்ள இல்லத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு பகல் 11 மணியளவில் வேலணையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு 2 மணிக்கு தகனக்கிரியைக்காக பூதவுடல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என உறவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தாயாரின் ஆத்மா சாந்தியடைய இயற்கையினை வேண்டி நிற்கும் தளிர் ஊடகம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news