ரஜினி ரசிகர்கள், ஜெயிலர் படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் படம் தொடர்பான தங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்துவருகின்றனர். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், யோகிபாபு, சுனில் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ஜெயிலர் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர். ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'விறுவிறுப்பான அனைத்து அம்சங்களும் நிறைந்த எண்டர்டெயினர். டைகர் முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த் வசீகரிக்கிறார். நெல்சனுக்கு இந்தப் படம் பெரிய கம்பேக். நல்ல முதல் பாதி மற்றும் சிறப்பான இரண்டாம் பாதி. சண்டைகாட்சிகள் நன்றாக இருந்தது. டார்க் காமெடி கைகொடுத்திருக்கிறது. பாடல்களும் பின்னணி இசையும் தரம். துணை கதாப்பாத்திரங்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை சரியாக செய்திருக்கிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு ரசிகர், ஜெயிலர் - மிகப்பெரிய வெற்றி. நெல்சன் இஸ் பேக். தலைவரு அலப்பற மாஸாக இருக்கிறது என்று பதிவட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஜெயிலர் முதல் பாதி நன்றா இருக்கிறது. நெல்சனுடைய காமெடி, ரஜினியின் ஸ்டைலான ஆக்சன் காட்சிகளும் சிறப்பாக வந்திருக்கிறது. இடைவேளைக் காட்சி தரம். மாஸ் மசாலா படம் என தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர் ஒருவர், ஜெயிலர் முதல் பாதி - எதுவும் பெரிதாக ஈர்க்கவில்லை. ரஜினிகாந்த் - யோகி பாபு காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. முதல் பாதியில் பாடல்கள் இல்லை. ஒரே சண்டைக் காட்சிதான். நல்ல இடைவேளைக் காட்சி. மொத்தத்தில் முதல் பாதி சராசரிக்கும் குறைவாகவே இருக்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் சிறப்பான முதல் பாதி. தரமான காமெடி காட்சிகளும் சிறப்பான ஆக்சனும் பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. மாறுபட்ட நடிப்பை வழங்கி விநாயகன் கவர்கிறார். ரஜினிகாந்த் - யோகி பாபுவின் காட்சிகள் தரம். இடைவேளைக் காட்சி புல்லரிக்க செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news