ஆடி மாதம் என்றாலே புதிதாக திருமணம் ஆன தம்பதியருக்குதான் சிறப்பு. காரணம் அவர்கள் தலை ஆடி தமிழகத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் என்றாலே சிறப்புதான். அதிலும் தலை ஆடிக்கு செல்லும் மாப்பிளைக்கு ஆடிக்கு "சிறப்பு" என்று நாவல்பழம் தான் முதலில் கொடுப்பார்கள். படையலிலும் நாவல்பழம்தான் முக்கியமாக வைத்து படைப்பார்கள். ஆனியில் நாவல் மரத்தில் பூக்கள் பூத்து குலுங்கும். ஆடியில் "நாவல் பழம்" விளைச்சல் நன்றாக இருக்கும். தலை ஆடிக்கு செல்லும் புதுமண தம்பதிகள் "நாவல்பழத்தை" விரும்பி சாப்பிடுவர். தற்போது வீரிய ரகமான நாவல் பழம் பெரிய அளவில் இருக்கும். நாட்டு பழம் மட்டுமே துவர்ப்புடன், இனிப்பு கலந்த சுவையாக இருக்கும். இம்மாதத்தில் விளையும் நாவல் பழம், சர்க்கரை நோயாளிகள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். காரணம் இது ரத்த ஓட்டம் சீராக வைக்கும். நாவல் பழ கொட்டையை காயவைத்து அரைத்து பொடி செய்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் விலகும். இந்த பழம் கிலோ ரூ.200க்கு விற்கப்படுகிறது. இதனை ஆடி மாதத்தில் நம் முன்னோர்கள் கண்டிப்பாக வாங்கி சாப்பிட்டு வந்தனர். அது மட்டுமல்லாமல் தங்கள் வீட்டில் திருமணம் ஆன புதுமண தம்பதியருக்கும் குழந்தைகளுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். இன்றும் தென் மாவட்டங்களில் நாவல்பழம் மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news