நடிகர் ரஜினிகாந்த் இமய மலைக்கு பயணம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் கலவை விமர்சனங்களை பெற்றது. இதனால் அடுத்து வரவுள்ள ஜெயிலர் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். பீஸ்ட் படம் சறுக்கலை ஏற்படுத்திய நிலையில் அதன் இயக்குனர் நெல்சன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜெயிலர் படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயிலர் படம் முழுமையாக தயாரான பின்னர் அதனை பார்த்து விட்டு ரஜினிகாந்த் இமய மலைக்கு செல்வார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு படம் முடிந்த பின்னரும் ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். 2010-க்கு பின்னர் அவரது உடல்நிலை சற்று பாதிக்கப்பட்ட நிலையில, மீண்டும் அவர் 2018 இல் காலா, 2.0 படங்களை முடித்துக் கொண்டு இமயமலைக்கு சென்றார். பின்னர் கொரோனா தாக்கம் ஏற்பட்டதால் பயணத்தை தவிர்த்தார் ரஜினிகாந்த். ஜெயிலர் படம் முடிந்திருப்பதை தொடர்ந்து சமீபத்தில் ரஜினி மாலத்தீவு சென்றுவந்தார். இதுதொடர்பான படங்கள் கவனம் பெற்றன. இந்நிலையில் ஜெயிலர் படம் முழுமை பெற்ற பின்னர் அதனை பார்த்து விட்டு ரஜினி ஆகஸ்ட் 6, 7 தேதிகளில் இமயமலைக்கு செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news