தனது சினிமா வாழ்க்கை குறித்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதாவது, நான் நடிகை ஆவதற்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ஐஸ்வர்யா லட்சுமி மாடலிங்கிலும் ஆர்வம் கொண்டவர். மருத்துவம் படித்துவிட்டு சினிமாவில் நாயகியாக வலம்வருபவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. மலையாள திரைப்படங்கள் மூலம் அறிமுகமாகிய இவர், தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா படங்களிலும் பட்டையக்கிளப்பி வருகிறார். தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. அதன்பின் ஓடிடியில் தமிழ் கேங்ஸ்டர் திரைப்படமான ஜகமே தந்திரம் என்ற படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்தார். இதையடுத்து கார்கி, கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியவர். சினிமாவில் கதாநாயகியாக மட்டும் இல்லாது தயாரிப்பாளராகவும் ஐஸ்வர்யா கலக்கி வருகிறார். ஐஸ்வர்யா லட்சுமி தற்போது துல்கர் சல்மானுடன் கிங் ஆக் கோத்தா என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது சினிமா வாழ்க்கை குறித்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதாவது, நான் நடிகை ஆவதற்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு டாக்டராகப் பயிற்சி எடுக்கும் போதே நடிகையானேன். சினிமா குறித்து எனது பெற்றோருக்கு எதிர்மறையான கருத்து உள்ளது. நடிப்பை மரியாதைக்குரிய தொழிலாக கருதவில்லை. என்னுடைய சினிமா வாழ்க்கை எனக்கு இன்னும் பிடிக்கவில்லை. எனது பார்வையில் சினிமாவில் தொடர்வது எளிதல்ல தினமும் அதற்காக போராட வேண்டும் என கூறியுள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news