சமீபத்தில் இணையத்தில் வழக்கத்துக்கு மாறான புகைப்படங்கள் சேர் ஆகின. சிசிடிவியில் பதிவான காட்சிகளின் புகைப்படங்களாக இது சோசியல் மீடியாவில் பகிரப்பட்டது. அதில் இரு பெண்கள் நிர்வாணமாக மான் இறைச்சியை சாப்பிடுவதாக தெரிகிறது. ஆனால் உண்மை எதுவென உறுதிப்படுத்தப்படவில்லை. வெளியான தகவலின்படி, 36 வயதான கனேடிய பெண் கொரினியா ஸ்டான்ஹோப் தனது தோட்டத்தில் இறந்து கிடந்த மானை கண்டெடுத்தார். அந்த பெண் மானை புதைக்காமல், தோட்டத்தின் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு அதனருகே ஒரு கேமராவையும் வைத்துள்ளார். ஏதாவது காட்டு மிருகம் மானை சாப்பிட வரும்போது அதை வீடியோ எடுக்கலாம் என்ற ஐடியாவில் இதனை அவர் செய்துள்ளார். புலியோ அல்லது வேறு விலங்குகளோ சாப்பிட வந்தால், சிசிடிவி காட்சிகளில் காட்சி பதிவாகும் வகையில், இறந்த மான் வைக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் இரவு கேமராவை ஆன் செய்துவிட்டு அந்தப்பெண் தூங்கச் சென்றுள்ளார். அடுத்தநாள் சிசிடிவி காட்சியை பார்த்தபோது அப்பெண் அதிர்ச்சியில் உறைந்தார். அந்த வீடியோவில் நிர்வாணமான பெண்கள் நீண்ட தலைமுடியுடன் அந்த மான் இறைச்சியை பச்சையாகவே சாப்பிடுவது போல இருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்துள்ளார். இரண்டு பெண்களின் முகம் முடியால் மூடப்பட்டிருப்பதால் அவர்களைக் கண்டுபிடிப்பதும் கடினமாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி அதில் ஒருவர் பேண்ட் ஷூ அணிந்திருப்பது போலவும் தெரிகிறது. அதனால் இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மையை முதலில் ஆராய வேண்டுமென பொலிசார் தெரிவித்துள்ளனர். முதலில் வீடியோ உண்மையா பொய்யா என்பதும் குறித்து விசாரணை நடத்தப்பட்டு அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news