உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒருநாள் மதிய உணவு வழங்க உள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இதனையடுத்து உலக பட்டினி நாளான இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில், ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சென்னையில் மயிலாப்பூர், தியகராயர் நகர், திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மதிய உணவு விருந்து நடத்தினர். இந்த விருந்தில் வடை பாயாசத்துடன் உணவளித்ததாகவும், மனநிறைவுடன் உண்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். தஞ்சை மாவட்டத்தில், 52 இடங்களில் ஏழை எளிய மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உணவு வழங்கினர். தஞ்சையில், மாவட்ட பொறுப்பாளர் விஜய் சரவணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம், இனிப்பு ஆகியவை வழங்கப்பட்டன. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவாக பிரியாணியும் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. பசி இல்லா உலகம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மயிலாடுதுறை தொகுதியில் பொதுமக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உணவு வழங்கினர். மணல்மேடு, குத்தாலம் உள்ளிட்ட இடங்களிலும், தலா 250 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாகை, நாகூர், திருமருகல், திட்டச்சேரி, கீழ்வேளூர், கீழையூர், சிக்கல் உள்ளிட்ட 12 இடங்களில் பிரியாணி மற்றும் கறி விருந்து அளிக்கப்பட்டன. திருவாரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல இடங்களில் அன்னதான திருவிழா நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கானோருக்கு உணவுகள் வழங்கப்பட்டன. திருச்சியிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டார். அவருக்கு ரசிகர்கள் சார்பில் கும்பம் எடுத்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி கிழக்கு, மணப்பாறை, லால்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news