இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது முழுவதும் நடிகராக மாறியுள்ளார். கடந்த வருடம் செல்ஃபி, எஃப்ஐஆர், சீதா ராமம் போன்ற படங்கள் வெளியாகியிருந்தன. சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் முக்கியமான வேடத்தில் கௌதம் மேனன் நடித்திருந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் கௌதம் மேனன் நடித்துவருகிறார். இந்த நிலையில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அவர் பேசியதாவது, லோகேஷ் கனகராஜ் பலமுறை கேட்ட பிறகு தான் லியோவில் நடிக்க ஒப்புக்கொண்டேன். விக்ரம் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க லோகேஷ் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. லியோ படத்தில் ஒப்பந்தமானவுடன் முதலில் எனக்கு தான் போன் செய்தார். இந்தப் படத்தில் நீங்கள் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வேண்டும், என்னுடயை டீம் எல்லோரிடம் கேட்டபோது நீங்கள் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்றனர் என்று சொன்னார். அவர் என் கேரக்டரை சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. விஜய் கூடவே டிராவல் செய்யும் கேரக்டர் என்று பேசினார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news