img img img img img img img img img img img img img img img img

விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம்..

  
 


நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்த  உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், நலத்திட்ட உதவிகள் செய்வதில் ஈடுபடும் விதமாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார்.  மேலும் அந்த இயக்கத்திற்கு புஸ்ஸி என்.ஆனந்தை பொதுச்செயலாளராகவும் நியமித்திருக்கிறார்.

விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு இடங்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.  அத்துடன் கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு சில இடங்களில் அந்த மக்கள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் வெற்றி அடைந்தனர்.அவர்களை நடிகர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி செயல்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கினார். மேலும் இந்த விஜய் மக்கள் இயக்கம் வரும் காலங்களில் அரசியல் கட்சியாக மாற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தின் செயல்பாடு மற்றும் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்த பொதுச் செயலாளர் புஸ்ஸ்.என்.ஆனந்துக்கு உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கான ஆலோசனை கூட்டம் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டங்களில் நடைபெற இருக்கின்றன. விஜய் மக்கள் இயக்கத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டம், நகரம், ஒன்றியம், பகுதி நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். அத்துடன் விஜய் மக்கள் இயக்கத்திற்காக செயல்படும் விவசாய அணி, மகளிர் அணி, இளைஞரணி ஆகியவ நிர்வாகிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
பாடல் : மண் மீட்க சென்றவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்கள்..... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : சித்தன் தெ.ஜெயமூர்த்தி, சினேகா குமரன்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்