img img img img img img img img img img

மர பாதுகாப்பு பலகையில் சிக்கி 7 மாத பெண் குழந்தை உயிரிழப்பு...

  


 ஊவாபரணகம, மசுபன்ன கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் படுக்கையைச் சுற்றியிருந்த மர பாதுகாப்பு பலகையில் சிக்கி 7 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

 
மஸ்பன்ன, வெலேக்கடே வீடு ஒன்றில் வசித்து வந்த கர்சனி மதுசிகா என்ற 7 மாத பெண் குழந்தையே வீட்டின் கட்டிலில் இருந்து வீழ்ந்து, மர பாதுகாப்பு பலகையில் சிக்கி உயிரிழந்துள்ளது.
 
உயிரிழந்த குழந்தையின் தாய் வீட்டில் வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில், குழந்தை உறங்கிக் கொண்டிருந்த படுக்கையறைக்கு அருகில் வந்து பார்த்தபோது, ​​கட்டிலைச் சுற்றியிருந்த மர பாதுகாப்பு பலகையில் குழந்தை மாட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு குழந்தையை மீட்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊவாபரணகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்