img img img img img img img img img img

பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி என்று கூறிய நபர் கைது..

  


 சம்மு காசுமீரில் உள்ள லலித் கிராண்ட் ஓட்டலில் கிரண் படேல் என்ற நபர் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி என்று கூறி தங்கியிருப்பதாக காசுமீர் காவல்துறைக்கு துப்பு கிடைத்தது. அதன் பேரில் கிழக்கு சிறிநகர் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு தனிப்படை கடந்த மார்ச் 3ஆம் தேதி ஓட்டலுக்கு விரைந்த அந்த நபரை பிடித்து விசாரித்தது. அப்போது  பல அதிர்ச்சிக்குரிய தகவல்கள் அம்பலமானது.

 
கைதான நபர் குசராத் மாநிலத்தைச் சேர்ந்த கிரண் படேல். பலே மோசடி பேர்வழியான இவர் மீது குசராத் மாநிலத்தில் 3 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவர் சமீபத்தில் சம்மு காசுமீருக்கு வந்து அங்குள்ள இரு மாவட்டங்களின் துணை ஆணையர்களை சந்தித்து பேசியுள்ளார். தான் பிரதமர் அலுவலகத்தின் உயர் அதிகாரி, உத்திகள் மற்றும் பிரசாரப் பிரிவின் கூடுதல் இயக்குநர் பொறுப்பில் இருப்பதாக கூறி நாடகமாடியுள்ளார். இதை நம்பிய அவர்கள் கிரண் படேலுக்கு புல்லட் ப்ரூப் வாகனத்துடன் கூடிய கமேண்டா பாதுகாப்பு வசதியை செய்து கொடுத்துள்ளனர். தெற்கு காசுமீர் பகுதிகளில் உள்ள ஆப்பிள் தோட்டங்களை அடையாளம் காண தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக கதை கட்டி பல அரசு அதிகாரிகளை ஏமாற்றி காசுமீரில் தங்கி வந்துள்ளார். இவருடன் குசராத்தை சேர்ந்த ஒருவரும், ராசசுத்தானை சேர்ந்த ஒரு நபரும் தங்கியுள்ளனர். சம்மு காசுமீர் சிஐடி பிரிவுக்கு இவரது மோசடி குறித்து தகவல் கிடைக்கவே, அதன் மூலம் கிரண் படேல் சிக்கியுள்ளார். அவருடன் இருந்து மூன்று நபர்களும் தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர்.
 
பிரதமர் அலுவக அதிகாரி என்று கூறினால் அதை சாரிபார்க்காமல் எப்படி சம்மு காசுமீர் அரசு நிர்வாகத்தினர் கோட்டை விட்டனர் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. அவர் தொடர்பு கொண்டு பேசிய அதிகாரிகளிடம் தற்போது விசாரணை நடைபெறுகிறது. கைது செய்யப்பட்ட கிரண் படேல் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அத்துடன் தனிப்படை ஒன்று குசராத் விரைந்து அங்கும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. பலத்த பாதுகாப்பு அம்சங்களை கொண்ட சம்மு காசுமீரிலேயே ஒரு நபர் தன்னை பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி பலே மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.
 

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்