img img img img img img img img img img

சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியல்...

  


 உலக நாடுகளை அச்சுறுத்தும் தலையாய பிரச்சனைகளில் பயங்கரவாத நிகழ்வுகளும் ஒன்று. மக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை சீர்குலைக்கும் பயங்கரவாத நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலை அவுசுத்திரேலியாவைச் சேர்ந்த Institute for Economics and Peace என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியல் என்ற பெயரில் இந்த ஆய்வறிக்கை வெளியகியுள்ளது.

 
2022ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிசுத்தான், ஆப்கானிசுத்தான் பிரதான இடங்களை பிடித்துள்ளன. அத்துடன் கடந்தாண்டு ஆப்கானிசுத்தானை விட பாகிசுத்தானில் கூடுதல் பயங்கரவாத சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தெற்கு ஆசியாவில் அதிகளவிலான பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறும் நாடு என்ற முதலிடத்தில் 2017இல் இருந்து ஆப்கானிசுத்தான் இருந்து வந்தது. கடந்தாண்டு ஆப்கானிசுத்தானை பின்னுக்கு தள்ளும் அளவிற்கு கூடுலதான பயங்கரவாத சம்பவங்கள் பாகிசுத்தானில் நடைபெற்றுள்ளது.
 
பாகிசுத்தான் நாட்டை பொறுத்தவரை 2021இல் 292 பேர் பயங்கரவாத சம்பவங்களால் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கையானது 2022இல் 120 சதவீதம் உயர்ந்து 643 மரணங்களாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்த மோசமான பட்டியலில் தெற்கு ஆசியாவில் முதலிடத்திலும், சர்வதேச அளவில் 6ஆவது இடத்திலும் உள்ளது. இந்த பயங்கரவாத சம்பவங்களில் பலுசிசுத்தான் விடுதலை இயக்கம், தெரிக் இ தாலிபான் ஆகிய இரு அமைப்புகளும் கணிசமான தாக்குதல்களை நடத்தியுள்ளன. பாகிசுத்தான் பயங்கரவாத மரணங்களில் 36 சதவீதம் பலுசிசுத்தான் விடுதலை இயக்க அமைப்பு மூலமாக நிகழ்ந்துள்ளது. ஆப்கானிசுத்தான்-பாகிசுத்தான் எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் மூலம் 74 சதவீத உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.  பலுசிசுத்தான் விடுதலை இயக்கம், தெரிக் இ தாலிபான் அமைப்புகள் இரண்டையும் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளன.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்