img img img img img img img img img img

நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை அபகரிக்கும் முயற்சி...

  


 சிறிலங்கா தொல்பொருள் திணைக்களம், யாழ்ப்பாணம் நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை அபகரிக்கும் முயற்சியை  முன்னெடுத்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 
இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள வரலாற்று இடங்களை சிறிலங்கா தொல்பொருள் திணைக்களம் அபகரித்து வரும் நிலையிலேயே நெடுந்தீவிலும் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
மேலும் இது தொடர்பில் தெரியவருகையில், 
 
நெடுந்தீவு தமிழர்களுடைய வரலாற்றை பறைசாற்றும் தலைசிறந்த சுற்றுலாத்தளமாக காணப்படும் நிலையில் அங்கு திட்டமிட்டு பௌத்தமயமாக்கல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், கோட்டை மற்றும் மாவிலி இறங்குதுறைப் பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதி இன்றி சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் விளம்பர பலகையும் நாட்டப்பட்டுள்ளது.
 
இவ்வாறு நாட்டப்பட்டுள்ள பதாதையை அகற்றி கோட்டையின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் பேண உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் அங்கசன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகள் சிறிலங்கா தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நெடுந்தீவிலும் இவ்வாறான சம்பவம் தற்போது இடம்பெற்றுள்ளது. ஆகவே கறைபடியாத வீரத் தமிழர் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்கும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அதிகாரிகள் இனங்களுக்கிடையில் விரோதங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையே தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.நாட்டு மக்களுக்குள் குரோதங்களை ஏற்படுத்தி விட்டு ஒருபோதும் பொருளாதார மீட்சியைப் பெற முடியாது என்பதனை உரிய தரப்பினர் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழர்களுடைய வரலாற்றை திரிவுபடுத்தி அதனூடாக மேற்கொள்ளப்படவுள்ள பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை உரிய அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
கி.மு 200ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாண இராசதானிகளின் கீழ் இருந்த நெடுந்தீவு மற்றும் காரைநகர் பகுதிகளை ஆட்சி செய்த சிற்றரசனே வெடியரச மன்னன். இந்த நிலையில் வெடியரசன் கோட்டையின் எச்சங்களை பௌத்த தாது கோபுர எச்சங்களாக சித்தரித்து சிறிலங்கா தொல்பொருள் திணைக்களம் பௌத்தமயமாக்கல் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்