img img img img img img img img img img

எலி பிடிக்க 1 கோடியே 38 லட்சம் ரூபாய்...

  


நியூயாா்க் மேயர் அலுவலகத்தில், எலி பிடிக்க 1 கோடியே 38 லட்சம் ரூபாய் சம்பளமானு நம் எல்லோரையும் வாய்ப்பிளக்க செய்தது சமீபத்தில்  இருந்து வெளியான ஒர் அறிவிப்பு. எலிகள் என்றாலே பெரும் தொல்லைதான் என்றாலும் நியூயாா்க்கில் அது கூடுதல் தொல்லையாக இருக்கிறது. அங்கு உள்ள சுரங்கப் பாதைகளில் 20 லட்சத்திற்கும் அதிகமான எலிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

எலிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகள் மேலும் அச்சத்தை கிளப்பியுள்ளது. ஆம் பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித பயன்பாட்டிற்கு வரும் முன்பு விலங்குகள் மீது பரிசோதிக்கப்படும். அதிலும் எலிகள் மீதான பரிசோதனை சற்று கூடுதல்தான். கண்டுபிடிப்புகள் மட்டும் அல்ல எப்போதெல்லாம் வைரசு நோய்களால் மனித இனம் பாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் விலங்குகளை பரிசோதிப்பதும் இயல்பு. அப்படியாகத்தான் அமொிக்காவின் நியூயார்க் நகாில், பூங்கா, சுரங்கப்பாதை, குடியிருப்பு பகுதிகள் என பல்வேறு இடங்களில் இருந்து பிடிக்கப்பட்ட 79 எலிகளை ஆராய்ச்சியாளா்கள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். வைரசு பாதிப்பு குறித்தான அந்த ஆய்வு முடிவுகள் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளன, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 79 எலிகளில் 16 எலிகளுக்கு கொரோனா தொற்றின் உருமாறிய வகைகளான, ஆல்பா, டெல்டா, ஒமைக்ரான் வகை தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இந்நிலையில் எலிகள் மீதான சோதனைகளை மேலும் அதிகாித்திருப்பதாவும், எலிகளிடமிருந்து வேறு விலங்குகளுக்கு தொற்று பரவ வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்திவருவதாகவும் ஆராய்ச்சியாளா்கள் தொிவித்துள்ளனா்.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்