அமெரிக்காவின் ஏஞ்சல்ஸ் நகரில், 95-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த விழாவில், இந்திய நடிகை தீபிகா படுகோன் விருது வழங்குபவர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. "The Elephant Whisperers" சிறந்த ஆவண குறும்படமாக ஆஸ்கரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டின் முதுமலையில் யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானைகளை பராமரித்த பழங்குடியின தம்பதி பொம்மன் - பெல்லி தம்பதியையும் அவர்கள் வளர்த்த ரகு என்ற யானையையும் மையமாக வைத்து வன புகைப்பட கலைஞர் கார்த்திகியால் உருவாக்கப்பட்ட ஆவணப்படமாகும். சிறந்த அனிமேசன் திரைப்படமாக "கில்லர்மோ டெல் டோரஸ் பினோச்சியோ" படம் தேர்வாகியுள்ளது. சிறந்த துணை நடிகராக "கே ஹுய் குவான்" தேர்வாகியுள்ளார். “Everything Everywhere All at Once” என்ற திறைப்படத்திற்காக இந்த விருதினை அவர் வாங்கியுள்ளார். சிறந்த துணை நடிகையாக "ஜேமி லீ கர்டிஸ்" தேர்வாகியுள்ளார். “Everything Everywhere All at Once” படத்திற்காக இந்த விருதினை அவர் பெற்றுள்ளார்.
கனேடிய நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதி நிதியும் கணக்காளருமான நிமால் அவர்களின் தந்தை வினாயகமூர்த்தி நேற்று காலமானார்.
8ம் ஆண்டு விழி நீர் அருவி ... (செல்வி அபிநயா சண்முகநாதன்)- 18-01-2023
Latest updates and news