img img img img img img img img img img

வாழைச்சேனை பிரதேச சபையானது கடந்த காலங்களில் 39 இலட்சம் சுற்றுலா திணைக்களத்திற்கு செலுத்த வேண்டும். புதிய தவிசாளர் விசாரணை

  


கோறளைப்பற்று வாழைச்சேனை  பிரதேசசபைக்கு சொந்தமான கல்குடா பாசிக்குடாவில் அமைந்துள்ள  ஆடை மாற்றும் நிலையத்திற்க்கான நீர் வழங்கும் சேவையை சுற்றுலா திணைக்களம் நிறுத்தியுள்ளது.
 
சுற்றுலா திணைக்களம் ஆடை மாற்றும் நிலையத்திற்கு நீரை வழங்கி வந்த நிலையில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையானது கடந்த காலங்களில் 39 இலட்சம் ரூபாவை சுற்றுலா திணைக்களத்திற்கு செலுத்தாத   காரணத்தினால் நீரை மாத்திரம் இன்றி ஆடை மாற்றும் நிலையம் வாகன தரிப்பிடங்களையும் கையகப்படுத்துவதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது.
 
 ஆனாலும் பாசிக்குடா  சுற்றுலா நிறுவன முகாமையாளர் மற்றும் சுற்றுலா நிறுவன முகாமையாளர்களுடன் தற்போதைய தவிசாளர் க.கமலநேசன் மற்றும் செயலாளர் பேச்சுவார்த்தை நடாத்தினர்.
 
அந்த வகையில் ஆடை மாற்றும் நிலையத்தையும் வாகன தரிப்பிடத்தையும் தொடர்ந்து பராமரிப்பதற்கும் எதிர்காலத்தில் பாசிக்குடாவில் சபைக்கான காணி ஒன்றை உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொள்ளவும் LDSP வேலைத்திட்டம் ஒன்றிற்கான ஆதரவையும் பெற்றுக் கொள்ள முடிந்தது.
 
கடந்த காலங்களில் எந்த அடிப்படையில் குத்தகைப்பணம் முழுமையாகப்பெறாமல் குத்தகைக்கு வழங்கப்பட்டது என்ற காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது பிரதேச சபையின் கடமைப்பாடு என புதிய தவிசாளர் க.கமலநேசன் தெரிவித்தார்.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்