தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மயில்சாமி (57)உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மயில்சாமி. நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் உருகவைக்கும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வரும் வழியில் நெஞ்சு வலிக்கிறது என்று அருகில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும், மயில்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மயில்சாமியின் திடீர் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலக பிரமுகர்கள், ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கனேடிய நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதி நிதியும் கணக்காளருமான நிமால் அவர்களின் தந்தை வினாயகமூர்த்தி நேற்று காலமானார்.
8ம் ஆண்டு விழி நீர் அருவி ... (செல்வி அபிநயா சண்முகநாதன்)- 18-01-2023
Latest updates and news