1971ம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்த வாணி ஜெயராம் 10,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் வாணி ஜெயராம் பாடல்களை பாடியுள்ளார். 1971 ஆம் ஆண்டு குட்டி என்ற இந்தி படத்தில் பாடகியான அறிமுகமான அவர் 1974 ஆம் ஆண்டு தீர்க்க சுமங்கலி படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல் பாடி பிரபலமானார். வாணிஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மொழிகளில் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார். மேலும் கடந்த வாரம் இந்தியாவின் மிக உயரிய விருதுகளாகக் கருதப்படும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளுக்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விருது பட்டியலில் 6 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்திய திரையுலகின் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு தற்போது வயது 77 ஆகிறது.
கனேடிய நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதி நிதியும் கணக்காளருமான நிமால் அவர்களின் தந்தை வினாயகமூர்த்தி நேற்று காலமானார்.
8ம் ஆண்டு விழி நீர் அருவி ... (செல்வி அபிநயா சண்முகநாதன்)- 18-01-2023
Latest updates and news