img img img img img img img img img img

தைப்பூசம் சிறப்பு.. பழனி முருகன் கோயில் செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

  


 முருகன், தமிழ்க்கடவுள் என்று அனைவராலும் கொண்டாடி மகிழும் தெய்வம். அப்படிப்பட்ட முருகனைக் கொண்டாடும் திருவிழாக்களில் முக்கியமானவை வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்த சஷ்டி விரதம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகும். 

 
இவற்றில் தைமாதம் வரும் பூச நட்சத்திரம் மிகவும் சிறப்புடையது. தைப்பூச நாளில்தான் இந்தப் பிரபஞ்சத்தில் நீர் தோன்றியது என்று புராணங்கள் கூறுகின்றன.  அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் உருவாகின என்றும் நம்பிக்கை உள்ளது. அதனால்தான் உலக இயக்கத்துக்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட, வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இந்தத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்கிறோம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு தைப்பூசம் (பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி) தை மாதம் 22ம் தேதி வருகிறது.
 
இந்நிலையில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.பிப்ரவரி 4,5 ஆகிய இரு தினங்களில் மயிலாடுதுறையில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும் ரயில், பழனிக்கு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு சென்றடையும்.மறு மார்க்கத்தில் பிப்ரவரி 5,6 ஆகிய இரு தினங்களில் பழனியில் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் , மயிலாடுதுறைக்கு காலை 10.30 மணிக்கு சென்றடையும்.அதே போல் பிப்ரவரி 5,6 ஆகிய இரு தினங்களில் மயிலாடுதுறையில் காலை, 7.15 மணிக்கு புறப்படும் மற்றொரு ரயில் பழனிக்கு பகல் 1.15 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கத்தில், அதே தினங்களில் பழனியில் பகல் 2 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு இரவு, 8.30 மணிக்கு சென்றடையும்.
 
இந்த சிறப்பு ரயில்கள் மயிலாடுதுறை- கும்பகோணம்- பாபநாசம்- தஞ்சாவூர்-உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்