img img img img img img img img img img

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5வது ஐஎன்எஸ் நீர் மூழ்கிக் கப்பலான வாகீர் அர்ப்பணிக்கப்பட்டது...

  


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5வது ஐஎன்எஸ் நீர் மூழ்கிக் கப்பலான வாகீர் (INS Vagir) இந்தியாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்திய கடற்படையில் 150-க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் உள்ள நிலையில், 2027 ஆம் ஆண்டுக்குள் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த மத்திய பாதுகாப்புத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், பெரும்பாலானவை ரசியா, ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டவை என்ற நிலையில், கடந்த 2005-ம் ஆண்டில் பிரான்சின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து 6 புதிய நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

இதன்படி 2007 ஆம் ஆண்டில் மும்பை கட்டுமான தளத்தில் நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தொடங்கியது. முதல் நீர்மூழ்கியான ஐ.என்.எஸ். கல்வாரி கப்பல் 2017 ஆம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் ஐ.என்.எஸ். காந்தேரி கப்பலும், 2021 ஆம் ஆண்டு ஐ.என்.எஸ். கரஞ்ச் மற்றும் ஐ.என்.எஸ். வேலா நீர்மூழ்கி கப்பல்களும் அடுத்தடுத்து கடற்படையில் இணைக்கப்பட்டன.

இந்த வரிசையில் 5-வது நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வாகீர் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கடற்படை தளபதி அரிகுமார் புதிய நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். கடந்த 24 மாதத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட 3-வது நீர்மூழ்கி கப்பல் இதுவாகும்.

ஐ.என்.எஸ். வாகீர் நீர்மூழ்கி கப்பல் 67.5 மீட்டர் நீளம், 6.2 மீட்டர் அகலம், 12.3 மீட்டர் உயரம் கொண்டதாகும். இது டீசல், மின்சாரத்தில் இயங்கக்கூடியது. எதிரி போர்க்கப்பல்களை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டு உள்ளன. கடல் பகுதி மட்டுமின்றி வான்பகுதி, நிலப்பகுதிகளை குறி வைத்தும் தாக்குதல் நடத்த வல்லது. கடலுக்கு அடியில் 350 மீட்டர் ஆழம் வரை மூழ்கும் என்ற நிலையில், சுமார் 2 வாரங்கள் வரையில் கடலுக்கு அடியில் தொடர்ந்து தங்கி இருக்க முடியும். அதிக சப்தம் எழுப்பாது என்பதால் எதிரிகள் கடல் எல்லைக்குள் நுழைந்தாலும் எளிதில் கண்டறிய முடியாது.

இதற்கு முன் இருந்த ஐஎன்எஸ் வாகீர் 1973 ஆம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டு, ஏறக்குறைய 30 ஆண்டுகள் பணியாற்றியது. அதன் மறு அவதாரமாக ஐஎன்எஸ் வாகீர் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி அரிகுமார் தெரிவித்தார். இதை தொடர்ந்து, கல்வாரி ரகத்தில் 6-வது மற்றும் இறுதி நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வாக்சீர் அடுத்த ஆண்டு மார்ச்சில் இந்திய கடற்படையில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்