img img img img img img img img img img

8ம் ஆண்டு விழி நீர் அருவி ... (செல்வி அபிநயா சண்முகநாதன்)- 18-01-2023

  


  செல்வி அபிநயா சண்முகநாதன்

(கனடா வாட்டர்லூ பல்கலைக்கழக மாணவி)

எட்டு  ஆண்டுகள் கடந்த பின்னும் உன்
எழில் முகம் தான் பேரழகாய் தெரிகிறது.
நூறாண்டு வாழ வேண்டிய நீ போன பின்
மனதுக்குள் எரிமலை தான் உழல்கிறது
போராண்டு புது வேள்வி செய்த பூமியிலே
பூத்த நீ வேரூன்றி அல்லவா விருட்சமாக இருந்திருக்க வேண்டும்

பெற்றோரின் பெயரை ஊன்றி உலகுக்கு சொல்லியல்லவா
மகிழ்ந்திருக்க வேண்டும்...!
ஏன் செல்வமே அவசரமாக போனாய் -எங்கள்
கண்களை ஏன் கண்ணீர் கங்கையாக்கி போட்டாய்
தாலாட்டு பாடிய அன்னை முகம் இன்னும்- புன்னகையை
கண்டதில்லை தோள் தூக்கி உலகை காட்டிய தந்தை முகம்
இன்னும் இயங்கவில்லை
கூடப் பிறந்தவர்கள் கூடி மகிழவில்லை
தேடிய உறவுகள் இன்னும் திகைப்பிலிருந்து எழுந்திருக்கவில்லை

படைத்தவனே பொறாமை கொண்டானோ
உன் திறமையைப் பார்த்து
பல்கலைக்கழகமே பொறுத்து கொள்ளவில்லையோ
உன் புலமையிடம் தோற்று மருத்துவமே வியங்குமளவு வளர்ந்தாய்
யாவிலும் போட்டி போட்டு
ஏன் செல்வம்
 மரணத்திடம் சிக்கினாய்- எங்களை எல்லாம்
தவிக்க விட்டுப் போனாய்

உன் போல் ஒரு தேவதையை இனி எம் குலம் காண்பதெப்போ
உந்தனது பேரன்பை இனி நாம் உணர்வதெப்போ
கண் போல இருந்த ஒளியல்லவா- நீ காலம் தந்த பெரும் கொடையல்லவா நீ

அழுது அழுது அகம் வாடிப்போனோம்
ஆண்டவனை தொழுது தொழுது படியேறி வாறம்
விழுது விட்டு நீ மீண்டும் பூவாக வேண்டும்
ஒரு பொழுது நீ எம் குலத்தில் சேயாக வேண்டும்
எட்டாண்டு கடந்தாலும் இன்னும் எம் ஏக்கம்
குறையவில்லை
அழுகின்ற கண்கள் இன்னும் உன்னை தேட
மறக்கவில்லை
எழுகின்ற நாட்கள் எல்லாம் உந்தன் ஞாபகம்
எப்படி மறப்போம் உந்தன் பூ முகம்

ஐ சண்முகநாதன் குடும்பத்தினர்

Shan Master
Brampton

647-988-9367    

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்