தமிழ்நாடு முழுவதும் கடந்த 11ம் தேதி திரைக்கு வந்த வாரிசு திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இருந்தாலும் இதுவரை 50 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்துள்ளது. வரும் வாரங்களில் கூடுதலாக வசூலிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வாரிசு படக்குழுவினருக்கு சென்னை ஈ.சி.ஆரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடிகர் விஜய் சிறப்பு விருந்தளித்துள்ளார். அதில் படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த கொண்டாட்டம் மிகவும் ரகசியமாக நடந்ததாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நரிக்குறவ மக்களுக்கு வாரிசு பட டிக்கெட் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் 50க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. இதே போன்று, காஞ்சிபுரம் பாபு திரையரங்கில் விஜய் ரசிகர்கள் வாரிசு படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து திரையரங்க ஊழியர்களுக்கு பொங்கல் பொருட்களை பரிசளித்தனர்.
கனேடிய நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதி நிதியும் கணக்காளருமான நிமால் அவர்களின் தந்தை வினாயகமூர்த்தி நேற்று காலமானார்.
8ம் ஆண்டு விழி நீர் அருவி ... (செல்வி அபிநயா சண்முகநாதன்)- 18-01-2023
Latest updates and news