இன்று மாலை 5 மணிக்கு நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை முதலே விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இயக்குநர் வம்சி இயக்கும் "வாரிசு" படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோசனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு சோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். வாரிசு திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்த செய்தியை முன்பே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் தற்போது இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் தயாரிப்பு நிறுவனம், வாரிசு படத்தின் டிரைலர் ரிலீஸையும் அறிவித்துள்ளனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம், “வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு சன் டிவி யூ-ட்யூப் சேனலில் வெளியாகும். சீ யு சூன்” என படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்ததை குறிப்பிட்டனர். இந்நிலையில் இன்று ட்ரெய்லர் வெளியாகும் என்பதால் விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். காலை முதலே சோஷியல் மீடியாக்களில் வாரிசு படத்தை ட்ரெண்டு செய்து வருகின்றனர். குறிப்பாக இந்த பொங்கலுக்கு துணிவு படமும் ரிலீசு ஆகவுள்ளதால் கடும் போட்டியாக வாரிசு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனாலும் துணிவு ரிலீஸ் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று வாரிசு ட்ரெய்லரின் போது ரிலீச் தேதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனேடிய நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதி நிதியும் கணக்காளருமான நிமால் அவர்களின் தந்தை வினாயகமூர்த்தி நேற்று காலமானார்.
8ம் ஆண்டு விழி நீர் அருவி ... (செல்வி அபிநயா சண்முகநாதன்)- 18-01-2023
Latest updates and news