img img img img img img img img img img

20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் வென்று நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி..

  


கடந்த மாதம் 16-ந் தேதி, 8வது டி20 உலகக்கோப்பை தொடர் அவுசுதிரேலியாவில்  தொடங்கி இன்றுடன் நிறைவடைய உள்ளது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சூப்பர்-12 சுற்றில் வெற்றி பெற்று இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிசுத்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

முதல் அரையிறுதியில் பாகிசுத்தான் அணி நியூசிலாந்தையும், 2-வது அரையிறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இங்கிலாந்து - பாகிசுத்தான் அணிகளுக்கு இடையேயான இறுதி ஆட்டம் மெல்போர்னில் இன்று நடைபெற்றது.

இதில் டாசு வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி களமிறங்கிய பாகிசுத்தான் அணி பேட்டிசுமேன்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை பறிகொடுத்தனர். தொடக்க வீரர் ரிஸ்வான் 15 ரன்களுக்கும் கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.

இங்கிலாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிசுத்தான் அணி அடுத்தடுத்த விக்கெட்டை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் பாகிசுத்தான் அணி 8 விக்கெட்டை இழந்து 137 ரன்களை எடுத்தது. பாகிசுத்தான் அணியில் அதிகப்பட்சமாக ஹான் மசூத் 38 ரன்களும் சதப் கான் 20 ரன்களை எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய இங்கிலாந்து அணி சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டையும் அடில் ரஷித் மற்றும் கிறிஸ் ஜொர்டன் தலா 2 விக்கெட்டை எடுத்தனர். இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  இங்கிலாந்து அணி களமிறங்கியது.

முதல் ஓவரை வீசிய பாகிசுத்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி இங்கிலாந்து தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் விக்கெட்டை தூக்கினார். அடுத்து வந்த சால்ட் 10 ரன்களுக்கும் கேப்டன் ஜோஸ் பட்லரை 26 ரன்களுக்கு ஹரிஸ் ரவூப் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

களமிறங்கியது முதல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் கடைசி வரை போராடி இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவருடன் ஜோடி சேர்ந்த மொயின் அலியும் தன் பங்கிற்கு 19 ரன்களை சேர்த்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை போராடி விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து உலக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. மேலும் 50 ஓவர், 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து வென்று நடப்பு சாம்பியனாக இங்கிலாந்து அணி மாறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்