நடிகை நயன்தாரா- விக்னேசு தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து நயன்தாரா விக்னேசு சிவன் தமிழக அரசிடம் விளக்கமளித்துள்ளனர். பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேசு சிவன் ஆகியோருக்கு கடந்த யூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிசியாக இருந்தனர். இந்த நிலையில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர சோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 9-ம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேசு சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார். இந்நிலையில் வாடகைதாய் குறித்து பல கேள்விகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது. சட்டத்தை முறையாக பின்பற்றி அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்தனரா என விவாதம் எழுந்தது. வாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை சமீபத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் அமைத்தார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டிருந்ததாக விசாரணை குழுவிடம் விக்னேசு சிவன் - நயன்தாரா தம்பதி ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்ததிற்கும் அவர்கள் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
கனேடிய நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதி நிதியும் கணக்காளருமான நிமால் அவர்களின் தந்தை வினாயகமூர்த்தி நேற்று காலமானார்.
8ம் ஆண்டு விழி நீர் அருவி ... (செல்வி அபிநயா சண்முகநாதன்)- 18-01-2023
Latest updates and news