ஓட்டமாவடி பிரதேசத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துன்நெத்தி சனிக்கிழமை மாலை விசயம் ஒன்றினை மேற்கொண்டு மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார். ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.யு.எம்.இஸ்மையில் தலைமையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் நடைபெற்ற சந்திப்பில் பிரதேச கல்வியலாளர்கள், உலமாக்கள், ஊர்பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதன்போது நாட்டில் இடம்பெற்று வரும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதுடன், கட்சியின் வளர்ச்சி தொடர்பபகவும், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்தோசிக்கப்பட்டதுடன், கட்சி தொடர்பாக பிரமுகர்களின் கேள்விகளுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரால் பதில் வழங்கப்பட்டது. நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நிலைமை தொடர்பாகவும், அதில் இருந்து மீண்டு நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பிலும் தங்களது தேசிய மக்கள் சக்தி கட்சியில் திட்டமுள்ளதாகவும் தெளிவுபடுத்தினார். கலந்துரையாடலில் கலந்து கொண்ட பிரமுகர்களுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரால் நெருக்கடியை வெல்வதற்காக துரித அணுகுமுறை நூல் வழங்கி வைக்கப்பட்டது.
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
சிவமலர் விக்கினேசுவரன் அவர்கள் 17-06-2023 அன்று யேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்..
Latest updates and news