img img img img img img img img img

தொழில்நுட்பம் >>

 •  கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் சமீபத்தில் பிஐஎஸ் சான்று பெற்றது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

   
  தற்சமயம் வெளியீட்டுக்கு முன் கூகுள் நிறுவனமே புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை லீக் செய்து விட்டது. கூகுள் அதிகாரப்பூர்வ விற்பனை தளத்தில் கூகுள் பிக்சல் 4ஏ அதிகாரப்பூர்வ ரென்டர் வெளியானது. ரென்டர் விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்து உள்ளது. 
   
  இதனால் முந்தைய பிக்சல் ஸ்மார்ட்போன்களை போன்று, புதிய மாடலில் பெரிய பெசல்கள் இருக்காது. இணையத்தில் லீக் ஆகி இருக்கும் ரென்டரில் கூகுள் பிக்சல் 4ஏ கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. மேலும் இதில் பச்சை நிற பவர் பட்டன், ஒற்றை செல்ஃபி கேமரா, பின்புறம் ஒற்றை கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்படுகிறது.
   
  இதன் பேக் பேனல் பார்க்க பிக்சல் 4 போன்றே காட்சியளிக்கிறது. பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் மேல்புறத்தில் ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படுகிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போனில் வைபை, ப்ளூடூத், என்எஃப்சி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது.

 • சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுடனான போட்டியை எதிர்கொள்ள முயற்சிக்கும் எல்ஜி நிறுவனம் உலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிராஜக்ட் பி பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

   
  எல்ஜி நிறுவனம் கடந்த ஆண்டு விண்ணப்பித்த காப்புரிமை அடிப்படையில் பிராஜக்ட் பி ஸ்மார்ட்போன் உருவாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் நீளும் வகையிலும், தேவையற்ற போது மடித்து வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான ப்ரோடோடைப் மாடலை எல்ஜி உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 • வாட்ஸ்அப் வெப் சேவையில் ஒருவழியாக டார்க் மோட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், வாட்ஸ்அப் வெப் தளத்தில் இதுவரை டார்க் மோட் வசதி வழங்கப்படாமல் இருந்தது.

 • சில தினங்களுக்கு முன் இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிங்காரி போன்ற இந்திய செயலிகளுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. 

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்