img img img img img img img img img

அத்து மீறி அபகரிக்கப்படும் தமிழர் பூர்வீக நிலங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்...

  


நேற்றைய தினம்  குருந்தூர்மலைப் பகுதியில் தமிழர் நிலங்கள் அபகரிப்புக்கு எதிராக இடம்பெற்ற மக்கள் போராட்டம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் சிறிலங்கா படையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் ஆரம்பிக்கின்ற வேளையில் அந்த இடத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களிடம் அங்கிருந்த இராணுவத்தினர் விபரங்களை பதிவிடுமாறு கோரியுள்ளனர். இருப்பினும் ஊடகவியலாளர்கள் விபரங்களை பதிவிட முடியாது என மறுபுத் தெரிவித்த நிலையில் அங்கு மக்கள் அதிக அளவில் ஒன்று கூடியதால் அவர்கள் அந்த பதிவு முயற்சியை கைவிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் நேற்றைய தினம் குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்காக குருந்தூர் மலை அடிவாரத்தில் ஒன்று கூடிய மக்கள்,  பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து குருந்தூர்மலையின் மேற்பகுதிக்குச் சென்ற மக்கள், அங்கும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த டக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்களே இவ்வாறு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர்.

தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறான போராட்டங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்