img img img img img img img img img

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை...

  


என்.ஐ.ஏ அதிகாரிகள், சென்னை, கடலூர், மதுரை, திண்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலகத்தில்  சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த பணம் குறித்து தேசியப் புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தலைமை அலுவலகத்தில் அதிகாலையில் இருந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் துணை ராணுவ படை பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் பயாஸ்அகமது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி சேத்தியாதோப்பு காவல் நிலையத்திற்ககு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் யூசிப் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கரும்புக்கடை பகுதியில் PFI தேசிய செயற் குழு உறுப்பினர் இஸ்மாயில் என்பவரது வீட்டில் காலை 5.30 மணி முதல் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையை கண்டித்து போராட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளாதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய 50 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் மங்களூரு உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்