img img img img img img img img img

சுவிக்கி உணவு டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்தம்..

  


 தமிழகத்தில் சென்னையில் சுவிக்கி உணவு டெலிவரி ஊழியர்கள், வாரந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை நிறுத்தம், புதிய விதிமுறைகள் அறிமுகம் போன்ற காரணங்களால் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.

 
சென்னையில் சுவிக்கி மற்றும் சொமாட்டோ போன்ற உணவு எடுத்துச் செல்லும் வேலைகளில் பகுதி நேரமாகவும் முழு நேரமாகவும் ஆயிரக்கணக்கானோர் வேலையை செய்து வருகின்றனர். சுவிக்கி அதன் ஊழியர்களுக்கு எத்தனை பார்சல் வழங்குகிறதோ  அதற்கேற்றார் போல் வாரம் தோறும் ஊக்குத்தொகையானது வழங்கப்படுகிறது. தற்பொழுது சு விக்கி நிறுவனம் புதிய அட்டவணையை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
அதில் தினமும் 16 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் எனவும் ஊக்கத்தொகை என்பது கிடையாது எனவும் அறிவித்துள்ளது. வாரம்தோறும் ரூ.14,500 கிடைத்த வந்த நிலையில் 16 மணி நேர வேலையில் ரூ.12000 கூட கிடைப்பதில்லை. எங்களுக்கு பெட்ரோல் செலவு, உணவுச் செலவு மற்றும் வாகன செலவு போக வாரம் ரூ7000 மட்டுமே கிடைக்கிறது. புதிய விதிகளின்படி எவ்வளவு நேரம் வேலை பார்த்தாலும் குறிப்பிட்ட அளவு சம்பளம் மட்டுமே கிடைக்கிறது. இந்நிலையில், பழைய நடைமுறையை சுவிக்கி நிறுவனம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி அருகே சுவிக்கி நிறுவன ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் நேற்று இரவு பல்வேறு தரப்பினருக்கு தேவையான உணவு வீடு தேடி வழங்கும் பணியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
 

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்