img img img img img img img img img

திபெத்திய மக்களின் டிஎன்ஏ - களை சேகரித்து வைக்கும் சீனா அரசு..

  


சீனா அரசு திபெத்திய மக்களின் டிஎன்ஏ - களை சேகரித்து அந்த உயிரியல் தரவுகள் மூலம் மக்களை கண்காணிப்பதாக மனித உரிமை கண்காணிப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திபெத்தியத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் மக்களின் உயிரியல் தரவுகளை முறையான அனுமதி இல்லாமல் சீனா அரசு சேகரித்து வருகிறது என்று திபெத்திய ஊடகம் தெரிவித்துள்ளது. உயிர் பாதுகாப்பு (Bio-Security) என்ற கொள்கையின் அடிப்படையில் சீனா, தொழில்நுட்ப கண்காணிப்பில் முனைப்பு செலுத்தி வருகிறது. சீனாவின் அங்கீகாரத்தில் உள்ள திபெத், கிழக்கு துர்கிசுத்தான், தெற்கு மங்கோலியா போன்ற பகுதிகளில் பயோ - செக்யூரிட்டி என்ற கொள்கை மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த இந்த டிஎன்ஏ - களை சேகரிக்கும் பணி நடைபெறுவதாக திபெத் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமை கண்காணிப்பு அளித்த தகவலின் படி,
ஏழு மாகாண அளவிலான பகுதிகளில் 14 தனித்தனி வட்டாரங்களில் இந்த சேகரிப்பு நடைபெற்றுள்ளது. இதன் மூலம் இது எந்த அளவில் நடைபெற்று வந்துள்ளது என்பது தெரிகிறது. சிறிது காலம் முன்பு சீனா ஆயிரக்கணக்கான உய்குர் முசுலிம்களைக் கருத்தடை செய்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது திபெத் மக்களின் டிஎன்ஏ-களை சேகரிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் மனிதர்களின் உயிரியல் மாதிரிகளைச் சேகரிப்பது புதிதானது அல்ல. மேற்கத்திய நாடுகளில் உள்ளது போன்று சீனாவிலும் குற்றவாளிகளின் உயிரியல் மாதிரிகளைச் சேகரித்து வைப்பார். இதன் மூலம் சுமார் 100 மில்லியன் மக்களின் உயிரியல் மாதிரி தரவுகள் சீனாவிடம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்