img img img img img img img img img

செனிவாவில் மனித உரிமைப் பேரவை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்...

  


 செனிவாவில் உள்ள மனித உரிமைப் பேரவை முன்றலில், ஐ.நா மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரை மையப்படுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

 
இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பெரும் மனித உரிமை மீறல்களுக்காக சிறிலங்கா அரசாங்கத்தை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் எனக் கோரி ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் இந்தப் போராட்டம் இன்று இடம்பெற்றது. 
 
ஐ.நா மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரை மையப்படுத்தி செனிவாவில் உள்ள மனித உரிமைபேரவை முன்றலில் புலம்பெயர் தமிழ் மக்களால் இந்தக் கவனயீர்ப்பு நடத்தப்பட்டது.
 
இன்றைய போரட்டத்தில் நெதர்லாந்தில் இருந்து 1500 கிலோமீற்றர் தூரத்தை மிதிவண்டியில் கடந்து செனிவாவை வந்தடைந்த அறவழிப் போராட்டகாரர்களும் பங்கெடுக்கின்றனர். ஐ.நாவே கண்ணைத் திற, எமக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்